மட்டக்களப்பு – ஓட்டமாவடி சூடுபத்தினசேனை கொரோனா வைரஸ் அடக்கஸ்தலத்தில் இதுவரை 57 பேரின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணித்தவர்களின் சடலங்கள் கடந்த மார்ச் 5ஆம் திகதியில் இருந்து இங்கு அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
இதன்படி கடந்த 5ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியில் குறித்த பகுதியில் 57 பேரின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு ஆண் ஒரு பெண் உட்பட கத்தோலிக்கர்கள் இருவரின் சடலங்களும் உள்ளடங்கும் என்று ஓட்டமாவடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டு வந்த நிலையில், முஸ்லிம் மக்களின் கடும் எதிர்ப்புக்கு பின்னர் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது