T24 Tamil Media
அவுஸ்திரேலியா

விக்டோரியா அல்ப்ஸ் பகுதியில் அலையும் குதிரைகளை சுட்டுக்கொல்வதற்கு நடவடிக்கை.

விக்டோரியா அல்ப்ஸ் பகுதியிலுள்ள இயற்கைக்காடுகளில் அலையும் (feral)குதிரைகளை சுட்டுக்கொல்வதற்கு Parks Victoria நடவடிக்கை எடுத்துவருகிறது.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா அல்ப்ஸ் பகுதியில் Alpine தேசிய பூங்கா பிரதேசத்தில் அலைகின்ற குதிரைகள் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த தொந்தரவு அளித்துவருவதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து, பெரும் எண்ணிக்கையிலான குதிரைகளை பாதுகாப்பான முறையில் சுட்டுக்கொல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

இதற்கான கருத்துக்களை Parks Victoria அப்பகுதி மக்களிடம் கோரியிருந்தது. அதற்கு பதிலளித்த மக்களில் பெரும்பான்மையானோர், பாதுகாப்பான முறையில் குதிரைகளை சுட்டுக்கொல்வதற்கு விருப்பம் தெரிந்திருந்தனர்.

ஆனால், Parks Victoria மேற்கொண்டுவரும் இந்த குதிரைகளை சுட்டுக்கொல்லும் திட்டத்தின் கீழ், முழுமையாக மக்கள் கருத்துக்களை கேட்டறியவில்லை என்றும், இந்தக்குதிரைகளுக்கு தான் இயன்றளவு அடைக்கலம் அளித்துவருவதாகவும் தெரிவித்து, இந்த குதிரைகள் கொலைப்படலத்தை நிறுத்தக்கோரி Philip Maguire என்பவரால் தனிநபர் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

விக்டோரிய உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை தள்ளுபடி செய்துள்ளதையடுத்து, இந்த வழக்கு தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு கொண்டுசெல்லப்படுகிறது.

Related posts

ஹொங்கொங் குடிமக்களுக்கு அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு!

T24 News Desk 4

வைரஸ் தொற்றை மிக சிறப்பாக கையாண்டதாக பாராட்டப்படும் நியூசிலாந்து இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது

T24 News Desk 4

மெல்பேர்ன் ஏழு இந்தியப்பெண்கள் தற்கொலை கண்டுபிடிக்க தினறும் காவல்துறை.

T24 News Desk 4

மெல்பேர்னில் நடைபெற்ற Black Lives Matter ஆர்ப்பாட்டத்துக்கு சென்ற இன்னொருவருக்கு கொரோனா தொற்று.

T24 News Desk 4

மூளும் பகையால் மூன்றாம் உலகப்போருக்கு சாத்தியம் !! ரோபோக்களுடன் தயாராகும் நாடு

T24 News Desk 4

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முன்னிலை

T24 News Desk 2

முதலாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி.

T24 News Desk 4

போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவுஸ்ரேலியா பிரதமர் ஸ்கொட் மோரிசன்.

T24 News Desk 4

பயணிகளுக்கு மதுபானம் வழங்குவதை நிறுத்தும் விமான நிறுவனங்கள்.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more