T24 Tamil Media
ஆசியா

வூஹானில் இறப்பு எண்ணிக்கை முன்னர் அறிவித்ததை விட 50% அதிகம் – சீனா அறிக்கை

கொரோனா வைரஸ் தொற்றின் தொடக்க புள்ளியில் இறப்பு எண்ணிக்கை முன்னர் அறிவித்ததை விட 50% அதிகமாகும் என்று சீனா வெள்ளிக்கிழமை 17/04/2020 அன்று ஒப்புக் கொண்டுள்ளது.

தொற்றுநோயின் தொடக்க புள்ளியாகக் கருதப்படும் யூகான் பகுதியில் இறப்புகளைப் பதிவு செய்வதில் பிழைகளை ஏற்பட்டதாக சீனா அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த எண்ணிக்கை 50 சதவிகிதம் உயர்ந்து 3869 ஆக உயர்த்தப்பட்டது.

சீன அரசாங்கத்தின் வைரஸ் தொற்றுக்குறித்த புள்ளிவிவரங்கள் மீது பெரும் சந்தேகங்கள் உலகளாவிய ரீதியில் பல நாடுகளினால் முன்வைக்கப்பட்டு இருந்தன. இறந்த குடும்ப உறுப்பினர்களின் அஸ்தியை சேகரிக்க சவக்கிடங்குகளில் காத்திருக்கும் உறவினர்களின் நீண்ட வரிசைகளின் படங்களும் சந்தேகங்களை மேலும் எரியூட்டின.

சில மருத்துவமனைகளில் மட்டுப்படுத்தப்பட்ட நிபுணத்துவ ஊழியர்களே பணிபுரிந்த நிலையில், நோய் ஆரம்ப காலத்தில் உள்ளூர் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையங்களை முறையாக தொடர்புகொள்ள முடியாத நிலையில், தொற்றுநோயின் ஆரம்ப கட்ட எண்ணிக்கைகள் சரிவர அறிவிக்கமுடியவில்லை என வுஹானில் இருந்து பெயரிடப்படாத ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி மாநில ஒளிபரப்பாளர் சிஜிடிஎன் செய்தி வெளியிட்டுள்ளது.

இப்படியான மட்டுப்படுத்தப்பட்ட நிபுணத்துவ ஊழியர்கள் பணியில் இருந்த நிலையிலேயே நோயாளிகளின் பதிவுகள், இறப்பு எண்ணிக்கைகள் தவறாகப் பதியப்படுள்ளதாகவும், அதேவேளை நோயின் தொற்றின் ஆரம்ப காலத்தில் வெளிப்படையான தகவல்களை சீனா வழங்கவில்லை என்ற சந்தேகமும் அதிகரித்துள்ளதாக மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வுஹானில் உள்ள மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இறப்பு எண்ணிக்கையின் துல்லியம் குறித்து அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்புக்களில் பலமுறை கேள்வி எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது நோயின் தொற்றின் ஆரம்ப கட்டங்களில், சோதனைகள் பரவலாக கிடைக்காதபோது, ​​மக்கள் புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படாமல் இறந்துவிட்டதாக சில அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

தற்போது சீனாவால் உறுதிசெய்யப்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கைகூட சரியானதாக இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு என உலக அரசுகள் கருத்து வெளியிட்டுள்ளன.

Related posts

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங் விடயத்தில் சீனாவை விமர்சிக்கப் போவதில்லை என்று ஜப்பான் முடிவு!

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் மாடுகள் வெட்டத்தடை !! அமைச்சரவை அனுமதி

T24 News Desk 4

ஷாங்காய் நகரில் பாடசாலை மற்றும் காப்பகங்கள் திறக்கப்படுகின்றன.

T24 News Desk 4

ஜோர்ஜிய விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஜனநாயக ஆர்வலர்களை அடக்கி ஒடுக்கும் சீனா. ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு அமைப்பு.

T24 News Desk 4

ஜப்பான் நாட்டில் இளைஞர் யுவதிகளிற்கான வேலை வாய்ப்பு

T24 News Desk 2

ஜப்பானின் புதிய நடைமுறை.

T24 News Desk 4

ஜப்பானில் மண்சரிவு – காணாமல் போனநிலையில் 20 பேர்

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more