T24 Tamil Media
ஆசியா

வுஹானில் கொரோனா தொற்றுடன் எவரும் இல்லை – ஹூபே மாகாண சுகாதார ஆணையம்

சீனாவின் கொரோனா வைரஸ் தொற்றின் மையத்தில் உள்ள வுஹான், மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக சேர்க்கப்பட்ட நோயாளிகள் எவரும் இல்லை என்று ஹூபே மாகாண சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹூபே மாகாணத்தின் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அல்லது தொற்று உள்ளது என சந்தேகிக்கப்படுபவர்கள் எவரும் அனுமதிக்கபடவில்லை எனவும், தொற்றுக்குள்ளான கடைசி நோயாளி கடந்த ஞாயிறு அன்று வீடு திரும்பியதாகவும், பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 1,728 பேர் மாத்திரமே மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்றும் மாகாண சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

சீனாவில் ஷாங்காயில் 67 பேரும் பெய்ஜிங்கில் மூன்று பேரும் உட்பட நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல நகரங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் தொற்றுகள் ஏற்பட்டுள்ளன, இதனால் சர்வதேச விமானச்சேவைகளை கடுமையாகக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

நோய்த்தொற்று அபாயம் மிகவும் குறைந்துள்ளதால் இதுவரை அங்கிருந்து எதிர் நடவடிக்கைகளை மேற்பார்வைசெய்த சீன அரசின் மத்திய குழு ஹூபே மாகாணத்தினை விட்டுப் புறப்பட்டுவிட்டதாக சீனாவின் அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங் விடயத்தில் சீனாவை விமர்சிக்கப் போவதில்லை என்று ஜப்பான் முடிவு!

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் மாடுகள் வெட்டத்தடை !! அமைச்சரவை அனுமதி

T24 News Desk 4

ஷாங்காய் நகரில் பாடசாலை மற்றும் காப்பகங்கள் திறக்கப்படுகின்றன.

T24 News Desk 4

ஜோர்ஜிய விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஜனநாயக ஆர்வலர்களை அடக்கி ஒடுக்கும் சீனா. ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு அமைப்பு.

T24 News Desk 4

ஜப்பான் நாட்டில் இளைஞர் யுவதிகளிற்கான வேலை வாய்ப்பு

T24 News Desk 2

ஜப்பானின் புதிய நடைமுறை.

T24 News Desk 4

ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்! 5.1 ரிக்டர் ஆக பதிவு.

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more