200 இற்கு மேற்பட்ட ரொஹிங்கிய அகதிகளுடன் மலேசிய கடற்பகுதிக்குள் நுழைய முயன்ற படகை மலேசிய கடற்படை கப்பல்கள் தடுத்து நிறுத்தியுள்ளன. எனினும் அந்த படகில் இருந்த மக்களுக்கு மனிதாபினமான அடிப்படையில் உணவு வழங்கப்பட்டதாக மலேசிய கடற்படை அறிக்கை வெளியிட்டுள்ளன.
16/04/2020 வியாழக்கிழமை காலை 1030 மணி அளவில் ரொஹிங்கிய அகதிகளைக்கொண்ட படகானது லங்காவி தீவிலிருந்து 70 கடல் மைல் தொலைவில் கடற்பகுதிக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மலேசிய விமானப் படையினரால் அடையாளம்காணப்பட்டது.
மலேசியா கடற்படையின் ஹெலிகாப்டர் உதவியோடு K.D LEKIU மற்றும் K.D LEkIR ஆகிய கப்பல்கள் உடனடியாக சம்பந்தப்பட் கடல் பகுதிக்கு சென்று ரொஹிங்ய அகதிகளின் படகை வழிமறித்தான. இவ் அகதிகள் நாட்டிற்குள் நுழைந்தால் அதனால் கோவிட்-19 வைரஸ் பரவும் அபாயம் இருந்ததால் அந்த படகு நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை என மலேசிய கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.