இந்தியா – சீனா எல்லையில் நிலவி வருகின்ற பதற்றம் குறித்து இரு நாடுளின் உயர் அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுகள் நடந்துவரும் சூழலில் இந்தியாவுடனான எல்லையைப் பாதுகாக்கும் மேற்குத் தரைப் படைப் பிரிவுக்குச் சீனா, லெப் டினன்ட் ஜெனரல் சூ கிலிங்கைப் புதிய தளபதியாக நியமித்திருக்கிறது.
தரைப்படை, வான்படை ரொக்கெட்படை ஆகியவற்றை உள்ளடக்கிய குறித்த படைப்பிரிவின் தளபதியாக சாவோ ஜோங்கி இருந்து வருகிறார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 3 ஆயிரத்து 485 கிலோ மீட்டர் நீள எல்லை உள்ளது. இங்கு நிலவுகின்ற இராணுவ ஊடுருவல்களால் பிரச்சினை ஏற்படுகிறது.
லடாக் பகுதியில் அண்மையில் இவ்விரு தரப்பு இரா ணுவத்தினருக்கு இடையேயும் ஏற்பட்ட மோதலால் உண்டான பதற்றத்தைத் தணிப்பதற்குப் பேச்சுக்கள் நடந்துவரும் சூழலில் இந்தப் புதிய தளபதி நியமனம் நடந்தேறி இருக்கிறது.