T24 Tamil Media
ஆசியா

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வரப்பட வேண்டும்.

சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டன் ஓட்டலில் குடும்பத்துடன் அமர்ந்து தேனீர் குடிக்கும் புகைப்படம் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (70). ஊழல் வழக்கில் சிக்கிய இவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நவாசுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடல்நலக்குறைவை காரணம் காட்டி சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்திடம் அவரது குடும்பத்தினர் அனுமதி பெற்றனர்.

இதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக இங்கிலாந்து அழைத்து செல்லப்பட்டதாகவும் அங்கு மருத்துவமனையில் நவாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் லண்டனில் ஓட்டல் ஒன்றில் நவாஸ் குடும்பத்துடன் அமர்ந்து தேனீர் அருந்துவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதில் நவாஸ் நல்ல ஆரோக்கியத்துடன் முககவசம் கூட அணியாமல் சாவகாசமாக அமர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அவரை கைது செய்து பாகிஸ்தான் அழைத்து வர வேண்டும் என்றும் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தத் தொடங்கி உள்ளன.

Related posts

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங் விடயத்தில் சீனாவை விமர்சிக்கப் போவதில்லை என்று ஜப்பான் முடிவு!

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் மாடுகள் வெட்டத்தடை !! அமைச்சரவை அனுமதி

T24 News Desk 4

ஷாங்காய் நகரில் பாடசாலை மற்றும் காப்பகங்கள் திறக்கப்படுகின்றன.

T24 News Desk 4

ஜோர்ஜிய விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஜனநாயக ஆர்வலர்களை அடக்கி ஒடுக்கும் சீனா. ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு அமைப்பு.

T24 News Desk 4

ஜப்பானின் புதிய நடைமுறை.

T24 News Desk 4

ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்! 5.1 ரிக்டர் ஆக பதிவு.

T24 News Desk 2

வௌவால்களை மீண்டும் பாதுகாக்கும் சீனா.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more