சீனா, ரஸ்யாவுடன் இணைந்து நோய் தடுப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நோய் பரவும் அபாயத்தினை கூட்டாகச் சமாளிக்கவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ்லிஜியான் 14/04/2020 அன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ரஸ்யாவுக்குச் சென்ற சீன அரசின் நோய் தடுப்பு மருத்துவச் சிகிச்சை நிபுணர்கள் குழு ஏப்ரல் 11ஆம் நாள் ரஸ்ய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்துள்ளது. இது குறித்து, சாவ்லிஜியான் கூறுகையில், சிறப்பு நிபுணர்கள் குழு ரஸ்யா சென்றடைந்தவுடன், கொவைட்-19 நோய் சிறப்பு மருத்துவமனைக்குச் சென்று, ஆய்வு மேற்கொண்டு, நோய் தடுப்பு, மருத்துவச் சிகிச்சை முதலிய பிரச்சினைகள் பற்றி பரஸ்பர பரிமாற்றம் மேற்கொண்டுள்ளது என்று கூறிப்பிடுள்ளார்.
அமரிக்காவின் தற்போதைய எதிர்ப்பு அரசியலில் சிக்கியுள்ள சீனா மற்றும் ரஸ்யா, தங்களுக்குள்ளான பரஸ்பர உறவினை வளர்த்துக்கொள்வது குறித்து அமெரிக்கா விஷயம் தெரிவித்துள்ள நிலையில்,” கொவைட்-19 நோய் பரவலால் மனிதகுலத்துக்கு ஏற்பட்ட கடும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, பல்வேறு நாடுகள் மேற்கொண்டு வரும் நோய் தடுப்பு ஒத்துழைப்பை அரசியலாக்குவதை தவிர்க்க வேண்டும்” என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ்லிஜியான் கடந்த 13/04/2020 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில் தெரிவித்தார்.