ஜோர்ஜியாவில் சிறிய ரக வானூர்தி ஒன்று தீப்பிடித்து விழுந்து விபத்துக்குள்ளானதால் 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு இறந்தவர்கள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் வில்லிஸ்டனைச் சேர்ந்த ஒரே குடும்பத்தவர்கள் என்றும் உறவினரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காகச் சென்றுகொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வானூர்தி ஜோர்ஜியா வான்பகுதியில் சென்றபோது, திடீரெனத் தீப்பற்றி எரிந்து தரையில் விழுந்து நொருங்கியது. குறித்த வானூர்தி வானில் சிறிது நேரம் வட்டமிட்டதாகவும் பின்னர் தீப்பிடித்து விழுந்ததாகவும் விபத்து நேரில் பார்த்த கிராமவாசி ஒருவர் தெரிவித்தார்.