
சிங்கப்பூரில் 20/04/2020 நண்பகல் கிடைத்துள்ள தரவுகளின் படி 1, 426 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து இந்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,014க்கு அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அரம்பித்த நாள்கொண்டு இதுவரை அறிவிக்கப்பட்ட நாளாந்த தொற்றுக்களில் 20/04/2020 அன்றே மிகவும் அதிகமான தொற்றுக்களை கொண்டதாக உள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் தங்கும் விடுதிகளிலிருந்த வெளிநாட்டு ஊழியர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் 16 பேரும் இன்றைய எண்ணிக்கையில் அடங்குவர்.