மலேசியாவில் மூன்றாம் கட்ட மக்கள் நடமாட்ட கட்டுபாட்டை மீறுவோர் உடனடியாக குற்றம் சாட்டப்பட்டு நேரடியாக நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (Ismail Sabri Yaakob) கூறியுள்ளார்.
நாளுக்கு நாள் இத்தடையை மீறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இது அமல்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் “சிலருக்கு 1000 ரிங்கிட் அபராதம் என்பது சிறிய தொகையாக இருக்கிறது என நினைக்கிறேன். அதனால்தான் அவர்கள் தொடர்ந்து இந்த மக்கள் நடமாட்ட உத்தரவை மீறி வருகின்றனர். எனவே இனிமேல் பிடிபடுபவர்கள் நேரடியாக நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்படுவர். அவர்களுக்கான கடுமையான தண்டனையை நீதிமன்றம் நிர்ணயிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
13/04/2020 தினம் மட்டுமே 1374 பேர் இவ்விதியை மீறியதால் போலிசாரால் கைது செய்யப்பட்டு அவர்களில் 931 பேருக்கு 1000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. இதுவரை மொத்தமாக 9990 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 4306 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.