T24 Tamil Media
ஆசியா

அத்தியாவசிய தேவைக்கு தனியொருவராக, கூடியது 10km மட்டுமே பயணம்! – மலேசியா

கொரோனா வைரஸின் தொற்றின் வீச்சைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உலகம் எங்கும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் மலேசியாவிலும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அமுலில் உள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவின் இரண்டாவது கட்டத்தின் கீழ் உணவு, மருந்துகள் மற்றும் தினசரி அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான எந்தவொரு பயணமும் 10 கிலோமீட்டருக்குள்தான் இருக்க வேண்டும் என கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட விதிமுறைகளில் இவை அடங்கும். ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 14ஆம் தேதிவரை இந்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது.

அதோடு வாகனங்களில் ஒருவர் மட்டுமே இந்த பொருட்களை வாங்குவதற்கு செல்ல முடியும். பொருத்தமான காரணங்கள் இருந்தால் மட்டுமே மற்றொருவர் அந்த வாகனத்தில் உடன் செல்ல முடியும். சிறப்புக் காரணத்திற்காக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட நபர் இருக்கும் இடத்திற்கு அருகேயுள்ள போலீஸ் நிலையத்தின் பொறுப்பு அதிகாரியிடமிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதத்தை பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங் விடயத்தில் சீனாவை விமர்சிக்கப் போவதில்லை என்று ஜப்பான் முடிவு!

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் மாடுகள் வெட்டத்தடை !! அமைச்சரவை அனுமதி

T24 News Desk 4

ஷாங்காய் நகரில் பாடசாலை மற்றும் காப்பகங்கள் திறக்கப்படுகின்றன.

T24 News Desk 4

ஜோர்ஜிய விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஜனநாயக ஆர்வலர்களை அடக்கி ஒடுக்கும் சீனா. ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு அமைப்பு.

T24 News Desk 4

ஜப்பான் நாட்டில் இளைஞர் யுவதிகளிற்கான வேலை வாய்ப்பு

T24 News Desk 2

ஜப்பானின் புதிய நடைமுறை.

T24 News Desk 4

ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்! 5.1 ரிக்டர் ஆக பதிவு.

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more