T24 Tamil Media
அமெரிக்கா இலங்கை செய்தி

இலங்கை மனித உரிமை தொடர்பில் அமெரிக்கா விடுத்த அறிக்கை

இலங்கையின் கடந்தகால செயற்பாடுகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்ததுறை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த ஆண்டு தேர்தல் சுதந்திரமான மற்றும் அமைதியான சூழ்நிலையில் நடைபெற்றதெனவும், இதேநேரம் கொவிட் தொற்றுநோய் இருந்தபோதிலும் தேர்தல் சரியான முறையில் நிர்வகிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது, எனினும், தேர்தல் பிரச்சாரத்திற்காக செலவிடப்படும் பணத்தின் மீது எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும் அறிக்கை கூறுகிறது.

அத்தோடு இவ்வறிக்கை இலங்கையில் மனித உரிமைகள் குறித்தும் குறிப்பிடுகின்றது. பொதுமக்கள் மீது பொலிஸ் தாக்குதல் போன்ற பல மனித உரிமை மீறல்கள் கடந்த ஆண்டில் நடத்தப்பட்டதாகவும் கூறுகிறது. சிறைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் எழும் பிரச்சினைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அறிக்கை உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஏராளமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும், பயங்கரவாத தாக்குதலில் யாரும் நேரடியாக ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு அரசியலமைப்பின் 20 வது திருத்தம் நிறைவேற்று அதிகாரங்களை எவ்வாறு பலப்படுத்தியுள்ளது என்பதையும் அமெரிக்க வெளியுறவுத்துறையால் வெளியிடப்பட்ட இவ்வறிக்கை விவரித்துள்ளது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொண்டுரஸில் ஏற்பட்ட வெள்ளத்தால் 26 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more