அமெரிக்க நகரங்களில் 13 வது நாளாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட வன்செயல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்தும் சர்வதேச ரீதியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், அந்நாட்டில் மட்டுமன்றி ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி சர்வதேச ரீதியில் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்னால் ஆயிரக்கணக்கானவர்கள் தரித்து நின்றதனால், போக்குவரத்து முற்றாக ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேமன் தலைநகர் பாரிசில் உள்ள அமெரிக்க தூதுவராலயம் மற்றும் ஈபிள் கோபுரத்திற்கு என்பன அண்டிய பிரதேசங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், நூற்றுக்கணக்கானவர்கள் அந்த பிரதேசங்களுக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, அவுஸ்திரேலிய பிரிஸ்பேன் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்து கொண்டதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் மதிப்பிட்டுள்ளனர்.