கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளவர்கள் தொகை 1.6 மில்லியனைக் கடந்த நிலையில், உலகளாவிய இறப்புகள் 100,000 ஐ கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றானது குறைந்தது 177 நாடுகளில் பரவியுள்ளதுடன், மிகச் சமீபத்தில் போரினால் பாதிக்கப்பட்ட யேமன் நாட்டில் 10/04/2020 அன்று முதலாவது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஸ்பெயினையும் விட அதிகமாகியுள்ளது. 10/04/2020 வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குள் வைரஸ் தொற்றினால் கிட்டத்தட்ட 18,000 இறப்புகள் பதிவாகியுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் பிரித்தானியாவில் 10/04/2020 வெள்ளிக்கிழமை அன்று 980 இறந்துள்ளதுடன் பிரித்தானியாவின் அதிகபட்ச ஒற்றை நாள் இறப்பு எண்ணிக்கையாக இது அமைந்துள்ளதுடன், பிரித்தானியாவில் மொத்த இறப்பு எண்ணிக்கை 9,000 ஆக உயர்ந்துள்ளது.