உலகளவில் கடந்த சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் இந்த தகவலை கூறியுள்ளார்.
அமெரிக்காவின் நிலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ள அவர், அமெரிக்காவில் பரவும் தொற்றின் எண்ணிக்கை ஒட்டுமொத்த நாடுகளில் பதிவான எண்ணிக்கையை விட கூடுதலாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் நிறவெறி போராட்டங்கள் தொடர்வதால் கொரானா வைரஸ் பரவல் மேலும் அபரிமிதமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே ஐரோப்பிய நாடுகளில் தொற்றின் வேகம் இறங்குமுகமாக மாறியுள்ளது.