T24 Tamil Media
அமெரிக்கா

வுஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் வெளிவந்ததா? அமெரிக்காவின் தேடல் ஆரம்பம்

சீனாவின் வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் வெளிவந்ததா என்பதைத் தீர்மானிக்க முயற்சிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை சீனா தனக்கு தெரிந்த உண்மைகளை வெளிப்படையாக உலகுக்கு கூற வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ (Mike Pompeo) சீனாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுவரை கொரோனா வைரஸ் எவ்வாறு தோன்றியது என்பது அறியப்படாத விடயமாக உள்ளது. இவ் வைரஸானது இயற்கையாகவே உற்பத்தியாகியிருக்க வாய்ப்புக்கள் உள்ளது, இருப்பினும் உறுதியாக இயற்கை அல்லது சீனாவில் ஒரு ஆய்வகத்தில் மனிதனால் உருவாக்கப்பட்டது எனக்கூற தற்போது முடியாது என அமெரிக்க கூட்டுப் படைத்தளபதிகளின் தலைவரான ஜெனரல் மார்க் மில்லி (General Mark Milley) கடந்த செவ்வாய் அன்று தெரிவித்திருந்தார்.

சீன நகரமான வுஹானில் உள்ள வைராலஜி ஆய்வகத்தில் கோவிட் -19 உருவானது என்ற அமெரிக்க உளவுத்துறையின் உள்ளக அறிக்கையினை டொனால்ட் டிரம்ப் இதுவரை நிராகரிக்கவில்லை.

அதேபோல் கொரோனா வைரஸ் இயற்கையாக நிகழும் வைரஸ் என்றாலும், அது ஒரு வைராலஜி ஆய்வகத்தில் இருந்து வெளிப்பட்டது என்று அமெரிக்க அரசாங்கத்திற்கு இப்போது அதிக நம்பிக்கை உள்ளது, அதனைக் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்து என்ன என Fox News இன் வெள்ளை மாளிகையின் நிருபர் ஜான் ராபர்ட்ஸ் (John Roberts) கேட்டபொழுது, அதனை டொனால்ட் டிரம்ப் மறுக்கவில்லை.

இதேவேளை, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ Fox தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில், “இந்த வைரஸ் சீனாவின் வுஹானில் தோன்றியதை நாங்கள் அறிவோம். அதேவேளை வுஹானில் வைராலஜி நிறுவனம் ஒன்று வுஹான் சந்தையிலிருந்து ஒரு சில மைல்கள் தொலைவில் உள்ளது என்பதையும் நாம் அறிவோம்” என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இறப்பு எண்ணிக்கை 20,000 இனைக் கடந்த நிலையில், ​​சீனாவின் அதிகாரப்பூர்வமாக எண்ணிக்கையான சுமார் 3,000 பேர் மாத்திரமே இறந்துள்ளனர் என்னும் அறிக்கை குறித்து டிரம்ப் மற்றும் பிற அதிகாரிகளும் ஆழ்ந்த சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Related posts

ஹொண்டுரஸில் ஏற்பட்ட வெள்ளத்தால் 26 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஹொங்கொங் விடயத்தில் சீனாவை விமர்சிக்கப் போவதில்லை என்று ஜப்பான் முடிவு!

T24 News Desk 4

ஹைட்ராக்சிகுளோரோகுயினை உண்பது எனது தனிப்பட்ட விருப்பம். டொனால்ட் ட்ரம்ப் கூட்டம்.

T24 News Desk 4

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் பலி!

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் பீசிஆர் இயந்திரங்கள் பழுது – இக்கட்டான நிலையில் ஸ்ரீலங்கா

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஜோர்ஜ் பிளொயிட்டின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ஹஸ்டனில் நேற்று இடம்பெற்றது.

T24 News Desk 4

ஜோர்ஜ் பிலொய்ட்டின் மரணத்துக்குக் காரணமான பொலிஸ் அதிகாரிக்கு பிணை.

T24 News Desk 4

ஜோ பைடன்-கமலா ஹரிஸ் நிர்வாகத்தால் இலங்கைக்கு ஏற்படவுள்ள அழுத்தம்- வெளியான தகவல்

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more