கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான செயற்கைக் சுவாசக் கருவி (ventilators) வழங்குவதற்கு முன்வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இற்கு ரஷ்ய அரசு நன்றியுடன் அதனை வரவேற்றுள்ளது.
கடந்த புதன் செய்தியாளர்கள் சந்திப்பில் “மாஸ்கோவில் சிரமப்படுகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு உதவப் போகிறோம். இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு செயற்கைக் சுவாசக் கருவி (ventilators) வழங்க யு.எஸ் தயாராக உள்ளது” என டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில் அதனை ரஷ்ய அரசு வரவேற்றுள்ளது.
ரஷ்யா 27,938 கொரோனா வைரஸ் தொற்றுக்களை 232 இறப்புகளையும் இதுவரை பதிவு செய்துள்ளது. நோய்த்தொற்றுகளின் அதிவேக வளர்ச்சியின் மத்தியில் செயற்கைக் சுவாசக் கருவி (ventilators) மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களைப் கொள்வனவுசெய்ய ரஷ்ய அரசு நடவடிக்கைகள் முன்னெடுதுள்ளது.
இதேவேளை இந்த மாத தொடக்கத்தில், ரஷ்யா செயற்கைக் சுவாசக் கருவி (ventilators) உள்ளிட்ட மருத்துவப்பொருட்களை அமெரிக்காவிற்கு வழங்கிருந்தது குறிப்பிடத்தக்கது.