அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 2 நாசா வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பி சாதனை படைத்துள்ளது.
புளோரிடாவில் உள்ள கேப் கெனரவலில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இரு அமெரிக்க விண்வெளி வீரர்களைச் சுமந்துகொண்டு அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 3.22 மணிக்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் ஃபால்கான் ரொக்கெட் விண்ணிற்கு ஏவப்பட்டது.
சுமார் 19மணி நேர பயணத்தின் முடிவில், ரொக்கெட்டில் இருந்த குரூ டிராகன் களம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மூலம் தாமாகவே சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்ற நாசா வீரர்களான பெக்கென், ஹர்லி ஆகிய இருவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சில உடல் ரீதியான சோதனை செய்யப்பட்ட பின்னர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அவர்கள் தங்களின் பணிகளை தொடர்வார்கள்.
வரலாற்றிலேயே முதல் முறையாக மனிதர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் எனும் பெருமையை “எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ்நிறுவனம் பெற்றது.