மத்திய அமெரிக்காவில் எல் சல்வடோரில் அமண்டா சூறாவளி காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
எல் சல்வடோரில் அமண்டா சூறாவளி காரணமாக பலத்த மழையால் ஆறுகள் நிரம்பி வழிகின்றமையால் நகர வீதிகள் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு பாரிய நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமண்டா சூறாவளி காரணமாக மொத்தம் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள் என சல்வடோர் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சான் சல்வடோரில் ஐம்பது வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு மத்திய அமெரிக்கா மற்றும் தெற்கு மெக்ஸிகோவின் சில பகுதிகளில் அமண்டா சூறாவளி காரணமாக கனமழை கொட்டித் தீர்க்கும் என்றும், மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.