அமெரிக்க மகிழூந்து (car) உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோர்ட்டோஸ் (General motors) தற்போதைய அவசரகால சூழ்நிலையினைக் கருத்தில்கொண்டு மகிழூந்து (car) உற்பத்திசெய்யும் தொழிற்சாலையில் செயற்கைச் சுவாசக் கருவிகளை தயாரித்துள்ளது.
GM மற்றும் வென்டெக் லைஃப் சிஸ்டம்ஸ் (ventec life systems) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தற்போதைய உலகளாவிய செயற்கச் சுவாசக் கருவி தட்டுப்பாட்டுக்களை நிவர்த்திசெய்யும் முகமாக சடுதியாக ஆரம்பிக்கப்பட்ட கூட்டுத்தயாரிப்பு முயற்சியில் முதற்கட்டமாக 30000 கருவிகளை அமரிக்கா அரசினருக்கு தயாரிக்கப்படுகின்றது.
மார்ச் 20 ஆம் திகதி ஜிஎம் மற்றும் வென்டெக் தமது கூட்டணியை அறிவித்தநிலையில் 17/04/2020 அன்று ஒரு தொகுதி செயற்கைச் சுவாசக் கருவிகள் முதற்கட்டமாக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.