T24 Tamil Media
அமெரிக்கா

பேரணி கலவரமாகியது! 30 பேர் பலி- ஆயிரக் கணக்கானோர் காயம்.

தென் அமெரிக்க நாடான சிலியின் சாண்டியாகோவின் மத்திய சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி முன்னெடுத்த வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், ஆயிரக் கணக்கானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்றையதினம் காலை அமைதியாக முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேரணியானது இரவு நேரத்தில் கலவரமாக மாற்றமடைந்தது.

இதனையடுத்து பொலிசார் தலைநகரில் கூட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பீரங்கியைப் பயன்படுத்தி போராட்டக்கார்களை தாக்கியமையினால் அப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பத்தில் பெரும்பாலும் அமைதியாக முன்னெடுக்கப்பட்டபோதிலும் வன்முறை சம்பவங்கள், சூப்பர் மார்க்கெட்டுகளை சூறையாடுவது மற்றும் பிற்பகுதியில் தலைநகர் முழுவதும் பொலிஸாருடன் மோதல்கள் என்பவற்றால் வன்முறையாக வெடித்தது.

இதேவேளை அமைதியான பேரணிகளை ஆரம்பத்தில் பாராட்டிய சிலியின் உள்துறை அமைச்சர் விக்டர் பெரேஸ்,

வன்முறைச் சம்பவங்களையடுத்து விரக்தியில், ஆர்ப்பாட்டக்காரர்களில் கோபத்தை ஒக்டோபர் 25 இடம்பெறவுள்ள அரசியலமைப்பு வாக்கெடுப்பில் வாக்களிப்பதன் மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு கூறினார்.

அத்துடன் “இந்த வன்முறைச் செயல்களைச் செய்பவர்கள் சிலி மக்கள் எங்கள் பிரச்சினைகளை ஜனநாயக வழிமுறைகள் மூலம் தீர்ப்பதை விரும்பவில்லை” என்றும் பெரேஸ் செய்தியாளர்களிடம் கூறியதுடன் எல்லை மீறியவர்களை தண்டிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

இந் நிலையில் கோபமடைந்த கும்பல் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி மேயரைக் கேலி செய்து அச்சுறுத்தியதுடன் முகமூடி அணிந்த நபர்கள் பொலிஸ் தலைமையகம் மற்றும் தேவாலயத்தை தீ வைத்தனர்.

அத்துடன் அதிகாலை வேளையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றொரு சாண்டியாகோ தேவாலயத்தைத் தாக்கியது.

இந்த அமைதியின்மைக்கு மத்தியில் 15 க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

சாண்டியாகோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் மாலை 6 மணியளவில் சுமார் 25,000 மக்கள் பங்கு பற்றியதாக பொலிஸார் மதிப்பிட்டனர்.

சிலியில் ஓய்வூதியம், சுகாதாரம் கல்வி மற்றும் சர்வாதிகாக அரசியலமைப்பு போன்றவற்றின் சீர்திருத்தங்களை முன்வைத்து 2019 ஒக்டோபர் 18 ஆம் திகதி வெகுஜன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு டிசம்பர் வரை தொடர்ந்தது.

இந் நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு வருடத்தை நினைவுகூரும் வகையிலேயே தற்போதைய பேரணி முன்ன‍னெடுக்கப்பட்டிருந்த நிலையில் கலவரமாக மாறியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹொண்டுரஸில் ஏற்பட்ட வெள்ளத்தால் 26 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஹொங்கொங் விடயத்தில் சீனாவை விமர்சிக்கப் போவதில்லை என்று ஜப்பான் முடிவு!

T24 News Desk 4

ஹைட்ராக்சிகுளோரோகுயினை உண்பது எனது தனிப்பட்ட விருப்பம். டொனால்ட் ட்ரம்ப் கூட்டம்.

T24 News Desk 4

ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி விமானத்தில் பயணித்தோர் அனைவரும் பலி

T24 News Desk 2

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் பலி!

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் பீசிஆர் இயந்திரங்கள் பழுது – இக்கட்டான நிலையில் ஸ்ரீலங்கா

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஜோர்ஜ் பிளொயிட்டின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ஹஸ்டனில் நேற்று இடம்பெற்றது.

T24 News Desk 4

ஜோர்ஜ் பிலொய்ட்டின் மரணத்துக்குக் காரணமான பொலிஸ் அதிகாரிக்கு பிணை.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more