கொரோனா நிலவரம் பற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மைனே மாகாணத்தில் உள்ள பியூரிட்டன் தொழிற்சாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்க உரையாற்றினார்.
அமெரிக்காவில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு பரிசோதனை செய்கிறோமோ, அந்த அளவுக்கு தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
அமெரிக்க பொருளாதாரம் மீண்டு வருகிறது. அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு இப்போது மாதாந்திர வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய வேலை வாய்ப்பு அதிகரிப்பு ஆகும்.
அடுத்த ஆண்டு அமெரிக்காவுக்கு மிகச்சிறப்பானதொரு நிகழ்வை அடையப்போகிறோம். வரப்போகிற தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக இருக்கப்போகிறது.
ஏனென்றால், நீங்கள் ஒரு தவறான ஜனாதிபதியை தேர்ந்தெடுத்தால், உங்கள் வரிகள் உயர்த்தப்படும். உங்களின் எல்லைகள் திறக்கப்படும். இதனால் நம் நாட்டுக்குள் பிற நாட்டினர் வந்து குவிவார்கள்.
கடந்து 3 ஆண்டுகளில் நான் அமெரிக்க பொருளாதாரத்தை வலுவானதாக கட்டி எழுப்பி உள்ளேன். ஆனால் அது கொரோனா வைரஸ் தொற்றால் மோசமான நிலையை அடைந்துளளது.
இந்த தொற்றுக்கு எதிரான போராட்டம், இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் தேசத்தின் மிகப்பெரியதொரு போராட்டம்.
கண்ணுக்குத் தெரியாத எதிரியை தோற்கடிக்க அமெரிக்க நிர்வாகம் மற்றும் அமெரிக்க தொழில்துறையின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி உள்ளோம்.