T24 Tamil Media
அமெரிக்கா

தேர்தலில் தோல்வி அடைந்தால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன் – டிரம்ப் அதிரடி முடிவு.

ஒருவேளை அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது பிரசாரத்தில் கூறினார்.

டொனால்டு டிரம்பின் பதவி காலம் வருகிற நவம்பருடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 3ந்தேதி நடைபெற உள்ளது.

இதற்காக குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியினரிடையே கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ள நிலையில் இரு கட்சியினரும் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

இதில், ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தின் சென்னையை சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் ஜோ பிடனுக்கே மக்கள் ஆதரவு அதிகமாக இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் கூறுகையில்,

நான் ஒரு வேளை அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்தீர்களா? வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு வேட்பாளருடன் தோற்று விட்டால் அப்புறம் தனது வாழ்க்கை வீண் என கருதி நாட்டைவிட்டு வெளியேறி விடுவேன் என கூறியுள்ளார்.

நான் இந்த உலகத்திலேயே சிறப்பான பணம் வசூலிப்பாளன். நான் நினைத்து இருந்தால் இன்னும் அதிகமான பணத்தை தேர்தல் செலவீனத்துக்கு பெற்றிருக்க முடியும். ஆனால் எனக்கு அது வேண்டாம்.

அமெரிக்க அதிபர் வரலாற்றில் அதிபர் தோரணையில் சிறப்பாக நடந்து கொண்டதே நானாகத்தான் இருப்பேன். ஆனால் ஆப்ரஹாம் லிங்கன் மட்டும் இதில் விதிவிலக்கு. அவர் தொப்பி அணியும் ஸ்டைலை முறியடிப்பது மிகவும் கஷ்டம் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

Related posts

ஹொண்டுரஸில் ஏற்பட்ட வெள்ளத்தால் 26 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஹொங்கொங் விடயத்தில் சீனாவை விமர்சிக்கப் போவதில்லை என்று ஜப்பான் முடிவு!

T24 News Desk 4

ஹைட்ராக்சிகுளோரோகுயினை உண்பது எனது தனிப்பட்ட விருப்பம். டொனால்ட் ட்ரம்ப் கூட்டம்.

T24 News Desk 4

ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி விமானத்தில் பயணித்தோர் அனைவரும் பலி

T24 News Desk 2

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் பலி!

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் பீசிஆர் இயந்திரங்கள் பழுது – இக்கட்டான நிலையில் ஸ்ரீலங்கா

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஜோர்ஜ் பிளொயிட்டின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ஹஸ்டனில் நேற்று இடம்பெற்றது.

T24 News Desk 4

ஜோர்ஜ் பிலொய்ட்டின் மரணத்துக்குக் காரணமான பொலிஸ் அதிகாரிக்கு பிணை.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more