கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிலொய்ட்டின் மரணத்துக்குக் காரணமான பொலிஸ் அதிகாரியை 18 கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான நிபந்தனை பிணை வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் மினியா பொலிஸ் நகரில் கடந்த மே 25 ஆம் திகதி ஜோர்ஜ் பிலொய்ட் என்ற கறுப்பினத்தவரை காலால் நெரித்து பொலிஸ் அதிகாரியான டெரக் சௌவ் கொன்றிருந்தார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, அந்நாட்டில் பெரும் போராட்டங்கள், கலவரங்கள் உருவாகின.
இதையடுத்து கொலையாளியாக சாடப்படும் டெரக்சௌவ் உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தங்களுக்கு பிணை கோரினர்.
இதையடுத்து ஹென்னபின் மாவட்ட நீதிமன்று பிரதான சந்தேகநபரை ஒரு மில்லியன் டொலர் (இலங்கை மதிப்பில் ரூ. 18. 75 கோடி நிபந்தனை பிணையில் விடுவித்தது.
துப்பாக்கி வைத்திருக்க முடியாது, பாதுகாப்பு பணியில் ஈடுபடக்கூடாது, மாநிலத்தை விட்டு வெளியேறக்கூடாது, குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற நிபந்தனைகளை டெரவ் சௌவ் ஏற்றுள்ளார்.