எதிர்வரும் 16ஆம் திகதி முதல் சீன விமானங்கள் அமெரிக்காவில் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது,
அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு சீனா விதித்த தடைக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்க விமான நிறுவனங்கள் சினாவிற்கான போக்குவரத்து சேவையை நிறுத்தின. இதையடுத்து அந்நிறுவனங்களுக்கு சீனா தடைவிதித்திருந்தது.
இருப்பினும் அமெரிக்காவின் பல நகரங்களுக்கு சீன விமான சேவைகள் இயங்கி வந்தன.
அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ், யுனை டெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்கள் தங்கள் இயக்கத்தை தொடங்க சீனாவிடம் அனுமதி கோரிய போதிலும் சீனா அதனைக் கண்டுகொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, 1980 ஆம் ஆண்டு விமான போக்குவரத்து ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டதாக குற்றம் சாட்டி ஜூன் 18 ஆம் திகதி முதல் சீன நாட்டு விமானங்களை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதில்லை என அதிரடி அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.