கொரோனா வைரஸின் தீவிரப்பிடியில் அமெரிக்கா சிக்குண்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் இறப்பு எண்ணிக்கை 35,000 ஐ கிட்டியநிலையில் தப்பிரரின் எண்ணிக்கை 667,000 ஆக உயர்ந்துள்ளன.
அதேவேளை கோரோன்னா வைரஸ் தாக்கத்தின் பின்னர் கடந்த வாரம் 5.2 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையின்மை நலன்களுக்காக விண்ணப்பித்ததாக அரசாங்கம் அறிவித்த அதே நாளில், நான்கு வார மொத்தமாக 22 மில்லியன்களைத் தாண்டியுள்ளது – இது அமெரிக்க வேலை இழப்புகளின் மிக மோசமான காலமாகும். இத்தொகையானது ஒட்டுமொத்த அமெரிக்க தொழிலாளர்களில் ஏழு தொழிலாளர்களில் ஒருவருக்கு வேலையில்லாமல் போவது போன்று அமையும்.
இப்படியாக ஒருபுறம் வேலையில்லாத நிலை, மறுபுறம் சரியும் பொருளாதாரம் என்னும் நிலையில், வெகு சீக்கிரம் இந்த முடக்க நிலையினை மாற்றக் கட்டம் கட்டமான அணுகுமுறை மூலம் நாடு வெகுவிரைவில் வளமை திரும்ப வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனைவரையும் வற்புறுத்து வருகின்றார்.