கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 70 லட்சத்தை நெருங்குகிறது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 600 மருத்துவப் பணியாளர்கள் பலியாகியுள்ளனர். இதுகுறித்து தி கார்டியன் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக, தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வந்த சுமார் 600 மருத்துவப் பணியாளர்கள், கொரோனா நோய்க்குப் பலியாகினர். ஆவர்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள், மருத்துவமனை அலுவலர்கள், காப்பகப் பணியாளர்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
கருப்பினத்தைச் சேர்ந்த அல்து ஆசிய மற்றும் பசிபிக் தீவு பகுதிகளை பூர்விகமாகக் கொண்ட மருத்துவப் பணியாளர்களே பெரும்பாலும் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனர் என்று தி கார்டியன் நாளிதழ் தெரிவித்துள்ளது.