அமெரிக்க கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி அவுஸ்ரேலியாவில் முன்னெடுக்கப்பட்ட ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர் பேரணி’யில் சுமார் 30,000 பேர் கலந்துக்கொண்டுள்ளனர்.
குறித்த பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவற்துறையினருக்கும் இடையே எவ்வித குழப்பமும் இன்றி குறித்த பேரணி நிறைவுற்றது.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு காவற்துறையினர் முகக்கவசங்களை வழங்கியதோடு, பிற அதிகாரிகள் கை சுத்திகரிப்பு மருந்துகளை வழங்கி ஆதரவு தெரிவித்தனர்.
குயின்ஸ்லாந்தின் தலைநகரான பிரிஸ்பேனில் ஓன்று திரண்ட சுமார் 30,000 பேரினால், இரண்டு முக்கிய வீதிகள் காவற்துறையினரால் மூடப்பட்டது.
பிரிஸ்பேன் பேரணியின் போது பழங்குடியின மக்களான மாவோரிகளால், பாரம்பரிய ஹக்கா அல்லது போர் நடனம் ஆடப்பட்டது. இந்த பெரிய கூட்டம், பின்னர் ஒரு உள்ளூர் காவற்துறை வளாகத்திற்கு அணிவகுத்துச் சென்றது.
இந்த பேரணியின் போது, சிலர் ‘அவர்கள் நீதி என சொல்கிறார்கள், நாங்கள் கொலை என்று கூறுகிறோம்’ என்று போராடடக்காரர்கள் கோஷமிட்டனர்.