T24 Tamil Media
அமெரிக்கா

அமெரிக்க எண்ணெயின் விலை வரலாற்றில் முதல் முறையாக எதிர்மறையாக மாறியுள்ளது.

அமெரிக்க எண்ணெயின் விலை வரலாற்றில் முதல் முறையாக எதிர்மறையாக மாறியுள்ளது.

உலகம் முழுதும் முடக்கப்பட்ட நிலையில் எண்ணெயின் தேவை பெருமளவு சரிவுகண்டுள்ளது. பயன்பாடு குறைந்த நிலையில் எண்ணையைச் சேமித்து வைக்கும் நிலைகளில் நிரம்புவதால், மேலதிக சேமிப்புத்தித்திறன் குறைக்கப்பட்டுள்ள நிலையில், வாங்குபவர்களுக்கு பதிலாக எண்ணெயினை வாங்கியவர்களுக்கு விற்பவர்கள் பணம் கொடுக்கும் நிலை தோன்றியுள்ளது. அதனால் கச்சா எண்ணெயின் விலை வரலாறில் முதல்முறையாக 0 டாலர்சிற்கும் கீழ் குறைந்துள்ளது.

அமெரிக்க எண்ணெய்க்கான அளவுகோலான வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (டபிள்யூ.டி.ஐ) (West Texas Intermediate (WTI), ஒரு பீப்பாயின் விலை $ -37.63 ஆக குறைந்துள்ளது.

உலக சந்தையில் எண்ணெய் அதன் எதிர்கால விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. மே மாதத்திற்கான விலை ஒப்பந்தம் 21/04/2020 அன்று காலாவதியாகி புதிய ஒப்பந்தம் தொடங்கவிருந்தது. தற்போதுள்ள மந்தமான சூழ்நிலையில், மேலதிக எண்ணெய் கொள்வனவு செய்து அதற்கான சேமிப்புச் செலவுகளை அதிகப்படுதலைத் தவிர்க்கும் முகமாக உலகச்சந்தையில் அனைவரும் மேலதிக வியாபாரத்தினைத் தவிர்த்ததால் திங்களன்று உலகளாவிய எண்ணெய் சந்தை கடுமையான வீழ்ச்சியைப் பெற்றது.

WTI க்கான ஜூன் விலைகளும் குறைந்துவிட்டன, ஒரு பீப்பாய்க்கு $ 20 க்கு மேல் வர்த்தகம் செய்யப்படுகின்றது. இதற்கிடையில், ப்ரெண்ட் கச்சா (Brent Crude) – ஐரோப்பா மற்றும் உலகின் பிற பகுதிகளால் பயன்படுத்தப்படும் அளவுகோலும் 8.9% குறைந்து ஒரு பீப்பாய் 26 டாலருக்கும் குறைவாக பலவீனமாகஉள்ளது.

Related posts

ஹொண்டுரஸில் ஏற்பட்ட வெள்ளத்தால் 26 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஹொங்கொங் விடயத்தில் சீனாவை விமர்சிக்கப் போவதில்லை என்று ஜப்பான் முடிவு!

T24 News Desk 4

ஹைட்ராக்சிகுளோரோகுயினை உண்பது எனது தனிப்பட்ட விருப்பம். டொனால்ட் ட்ரம்ப் கூட்டம்.

T24 News Desk 4

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் பலி!

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் பீசிஆர் இயந்திரங்கள் பழுது – இக்கட்டான நிலையில் ஸ்ரீலங்கா

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஜோர்ஜ் பிளொயிட்டின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ஹஸ்டனில் நேற்று இடம்பெற்றது.

T24 News Desk 4

ஜோர்ஜ் பிலொய்ட்டின் மரணத்துக்குக் காரணமான பொலிஸ் அதிகாரிக்கு பிணை.

T24 News Desk 4

ஜோ பைடன்-கமலா ஹரிஸ் நிர்வாகத்தால் இலங்கைக்கு ஏற்படவுள்ள அழுத்தம்- வெளியான தகவல்

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more