T24 Tamil Media
அமெரிக்கா

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்பு எப்போது?

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் படி, ஜனவரி 20 ஆம் திகதி பிற்பகலில்தான் அதிகாரப்பூர்வமாகப் புதிய அதிபர் பொறுப்பேற்க முடியும்.

அதற்கு, தலைநகர் வாஷிங்டன் டி சி-யில் பதவியேற்பு விழா நடத்தப்படும்,

அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, புதிய அதிபருக்கும், துணை அதிபருக்கும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார்.

இருப்பினும், இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன. பதவிக்காலம் முடிவதற்குள் தற்போதைய ஜனாதிபதி உயிரிழந்துவிட்டாலோ அல்லது அவர் பதவி விலகிவிட்டாலோ, துணை ஜனாதிபதிக்கு அதிபராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும்.

தேர்தல் முடிவுகள் வந்ததிலிருந்து, புதிய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடங்குவதற்கான நேரம், அதாவது ஜனவரி 20 வரையிலுமான காலம், ப்ரெசிடென்ஷியல் ட்ரான்சிஷன் என்று கூறப்படுகின்றது.

இந்த நேரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர், ஒரு இடைநிலைக் குழுவை உருவாக்குகிறார். இது பதவியேற்றவுடனேயே பணியைத் தொடங்க தேவையான ஏற்பாடுகளைச் செய்கிறது. ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் ஏற்கெனவே இதற்காக ஒரு வலைதளத்தை உருவாக்கி வருங்கால பணிகளுக்கு தயாராகி வருவதாகத் தெரிவித்தனர்.

அதில், “நோய்த் தொற்று, பொருளாதார மந்தநிலை, காலநிலை மாற்றம், இனப் பாகுபாட்டுப் பிரச்சனைகள் என நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் ஏராளம். பைடன்-ஹாரிஸ் நிர்வாகம் முதல் நாளிலிருந்து செயல்படத் தொடங்குவதற்காக இடைநிலைக் குழு வேகமாகத் தயாராகி வருகிறது. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் புதிய ஊழியர்களுக்கு தேவையான தகவல்களைச் சேகரிப்பதுடன், பதவியேற்பு நிகழ்ச்சிக்கும் உதவுகிறார்கள். இவர்களில் சிலர் பின்னர் ஜனாதிபதி அல்லது துணை அதிபருடன் இணைந்து செயல்படுகின்றனர்.

பராக் ஒபாமாவும் டொனால்ட் டிரம்பும் 2016 ஆம் ஆண்டில் ஓவல் அலுவலகத்தில் சந்தித்தனர், இரு தலைவர்களுக்கு இடையில் இணக்கம் குறைந்தே இருந்ததை அப்போதைய புகைப்படங்கள் வெளிப்படுத்தின. இப்போதும் அதே நிலை தான் தொடர்கிறது.

ஜோ பைடன், தனது குழுவை உருவாக்கப் பல மாதங்கள் செலவிட்டார். இதற்குத் தேவையான நிதியையும் அவர் திரட்டியுள்ளார், கடந்த வாரம் அவர் இது குறித்த ஒரு வலைதளத்தையும் தொடங்கியுள்ளார்.

Related posts

ஹொண்டுரஸில் ஏற்பட்ட வெள்ளத்தால் 26 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஹொங்கொங் விடயத்தில் சீனாவை விமர்சிக்கப் போவதில்லை என்று ஜப்பான் முடிவு!

T24 News Desk 4

ஹைட்ராக்சிகுளோரோகுயினை உண்பது எனது தனிப்பட்ட விருப்பம். டொனால்ட் ட்ரம்ப் கூட்டம்.

T24 News Desk 4

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் பலி!

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் பீசிஆர் இயந்திரங்கள் பழுது – இக்கட்டான நிலையில் ஸ்ரீலங்கா

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஜோர்ஜ் பிளொயிட்டின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ஹஸ்டனில் நேற்று இடம்பெற்றது.

T24 News Desk 4

ஜோர்ஜ் பிலொய்ட்டின் மரணத்துக்குக் காரணமான பொலிஸ் அதிகாரிக்கு பிணை.

T24 News Desk 4

ஜோ பைடன்-கமலா ஹரிஸ் நிர்வாகத்தால் இலங்கைக்கு ஏற்படவுள்ள அழுத்தம்- வெளியான தகவல்

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more