அமெரிக்காவின் பங்குச் சந்தையிலிருந்து சீன நிறுவனங்களை வெளியேறுமாறு கட்டாயப்படுத்துவது அமெரிக்காவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான வர்த்தக ரீதியான போர் கடந்த இரண்டு வார காலமாக மேலோங்கி வருகின்றன.
மேலும் கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என்ற குற்றச்சாட்டினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்ப் தொடர்ந்தும் குற்றச்சாட்டினை பதிவிட்டு வருகிறார்.
அத்துடன் சீனாவிற்கான பயண கட்டுப்பாடுளை அமெரிக்கா திடீரென விதித்துள்ளது .
இந்த நிலையிலேயே சீன நிறுவனங்களை அமெரிக்கா அதன் பங்குச் சந்தையிலிருந்து வெ ளியேறமாறு கட்டாயப்படுத்தினால் அமெரிக்காவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என சீனா தெரிவித்துள்ளது