கருப்பினத்தவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை டிரம்ப் கையாளும் விதங்கள் குறித்து தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்த அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபிலாய்ட்டினது உயிரிழப்புத் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகளும் அவரது அறிக்கைகளும் கோபத்தையும் அதிர்ச்சியையும் தருவதாக அமைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பினது அதிகாரத் துஸ்பிரயோகம் மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவைப் போலவே அமெரிக்க விழுமியங்களை நிலைநிறுத்த முற்படும் எதிர்ப்பாளர்களை ஆதரித்து வருவதாக ஜேம்ஸ் மட்டிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பினது அதிகாரத் தலைமை அனேகமானோருக்குப் பிடிக்கவில்லை எனவும் மேலும் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க துருப்புக்களை சிரியாவிலிருந்து வெளியேற்ற ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்ததை அடுத்து 2018 ஆம் ஆண்டில் மாட்டிஸ் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது