அமெரிக்காவில் போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், பல ஆண்டுகளாக காவல்துறை மற்றும் நீதித் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள தவறியதை இந்தப் போராட்டங்கள் உணர்த்துகின்றன. போராட்டங்கள் போராட்டக்காரர்களின் நியாயமான விரக்தியை எடுத்துரைக்கின்றன.
அதே நேரத்தில் போராட்டங்கள் மிகவும் நேர்மையான முறையில் இருக்க வேண்டும். போராட்டத்தில் வன்முறை என்பது கண்டிக்கத்தக்கது. போராட்டக்காரர்கள் வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.
எதிர்ப்பின் முக்கிய நோக்கம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நீதியைப் பெறுவதும் ஆகும். போராட்டத்தின் மூலம் அநீதியை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியும்.
திர்ப்புகளின் பலன்களை சட்டங்கள் மற்றும் நடைமுறைகளாக மாற்ற வேண்டும். குற்றவியல் நீதி, காவல்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தப் போராட்டங்களுக்கு உடனடியாக அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்