அமெரிக்க பொலிஸ் காவலில் இருந்த கறுப்பினத்தவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா முழுவதும் போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இதன் காரணமாக அமெரிக்காவில் சுமார் 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருவதால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.
இந்தப் போராட்டங்கள் பல இடங்களில் தற்போது கலவரங்களாக மாறியுள்ளன.
பல்பொருள் அங்காடிகள், கடைகள், கட்டிடங்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன், தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலயைிலேயே, Kentucky மாகாணத்தில் பொலிஸார் மற்றும் தேசிய காவலர் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 4 ஆயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.