அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார்.
இதனடிப்படையில், இந்ந ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள அமரிக்க ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்து, ஜோ பைடன் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.
இந்த விடயம் குறித்து தமது ட்விட்டர் பதிவினூடாக ஜோ பைடன் சில கருத்துக்களை ட்விட்டர் பதிவினூடாக ஜோ பைடன்ன்வைத்துள்ளார்.
நாட்டை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான போட்டியில் வெற்றி பெறுவதற்கு தேவையான, 1991 பிரதிநிதிகளைத் தாம் தக்கவைத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியிலிருந்து நெருக்கமான போட்டியாளராக விளங்கிய பெர்னி சாண்டர்ஸ் கடந்த ஏப்ரலில் விலகியதையடுத்து, ஜோ பைடனுக்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.