இம்மாதம் 14 ஆம் திகதி காதலர் தினத்தை முன் னிட்டு இணையதளங்களில் மோசடி இடம் பெறவுள்ளதாகத் தவல் வெளியாகியுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆகவே , இது தொடர்பில் மிகவும் கவனமாக இருக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், சுகாதார நடைமுறைகளை மீறி காதலர் தின களியாட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இவ்வாறான களியாட்ட நிகழ்வுகளை முன்னெடுப்பவர் களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு காதலர் தினம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் அனுமதியின்றி களியாட்டங்கள் மற்றும் விருந்து பசாரங்களை முன்னெடுப்பதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.