T24 Tamil Media
ஆபிரிக்கா

தடுப்பூசி வேலை செய்யாது; தென் ஆப்பிரிக்க வகை கொரோனா குறித்த பகீர் தகவல்கள்!

பிரிட்டன் கொரோனா வகையைவிடத் தென் ஆப்பிரிக்க கொரோனா வகை வேகமாகப் பரவாது என்றாலும்கூட தடுப்பூசிகள் இவற்றுக்கு எதிராக வேலை செய்யாமல் போகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

உலகெங்கும் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் தினசரி சராசரியாக 50 ஆரியத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகளும் படிப்படியாக ஒவ்வொரு நாடுகளிலும் தொடங்கப்பட்டு வருகிறது.

புயலாகப் பரவும் உருமாறிய பிரிட்டன் கொரோனா பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

இந்தச் சூழ்நிலையில், பிரிட்டன் நாட்டில் கடந்தாண்டு நவம்பர் மாத இறுதியில் உருமாறிய கொரோனா வகை கண்டறியப்பட்டது. இந்த புதிய வகை கொரோனா அதிக ஆபத்தானது இல்லை என்றாலும் மற்ற வகைகளைவிட 70% வரை வேகமாகப் பரவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை இந்த வகை கொரோனா 30க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிலும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் வேகமாகப் பரவும் இந்த வகை கொரோனா, இதுவரை ஐந்து நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசிகளுக்குப் பிறகு உலகம் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த மக்களுக்கு உருமாறிய கொரோனா வகைகளை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிரிட்டன் வகை கொரோனாவா காட்டிலும் தென் ஆப்பிரிக்க வகை கொரோனா வேகமாகப் பரவக் கூடியது என்று தகவல்கள் பரவ தொடங்கின. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், “தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் பிரிட்டன் வகையைவிட அதிக அளவில் பரவக்கூடியது என்பதற்கான அறிகுறி தற்போது வரை எதுவும் கண்டறியப்படவில்லை” என்றார்.

பிரிட்டன் நாட்டில் வைரஸ் பரவல் தொடர்ந்து மோசமாகி வருகிறது. கடந்த ஏழு நாட்களாக திசனரி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதன் காரணமாகப் பிரிட்டனில் வரும் பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதனால் குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வர இருந்த போரிஸ் ஜான்சனின் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசா, தேசிய கொரோனா வைரஸ் கட்டளை கவுன்சிலை கூட்டி, அதிகரித்து வரும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டார். தென் ஆப்பிரிக்க கொரோனா வகையில் அதிகளவில் புரத மாற்றங்கள் உள்ளதாகவும் இதனால் தடுப்பூசிகள் தென் ஆப்பிரிக்க கொரோனா வகைகளுக்கு எதிராக வேலை செய்யாமல் போகலாம் என்றும் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகெங்கும் 6.82 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உலகெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.68 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல கொரோனா உயிரிழப்பும்.74 லட்சத்தைக் கடந்துள்ளது.

Related posts

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேலில் இருந்து பஹ்ரைன் நாட்டிற்கு முதல் நேரடி விமானம்.

T24 News Desk 4

ருவாண்டாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் மரணம்.

T24 News Desk 4

மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவோரி கோஸ்ட்டில் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி ..

T24 News Desk 4

மூளும் பகையால் மூன்றாம் உலகப்போருக்கு சாத்தியம் !! ரோபோக்களுடன் தயாராகும் நாடு

T24 News Desk 4

முகநூல் மூலம் பெண் ஒருவர் விற்பனை .

T24 News Desk 4

முகக்கவசமின்றி நடமாடிய பல்கேரியாவின் பிரதமருக்கு அபராதம்.

T24 News Desk 4

முகக்கவசத்தினை கட்டாயமாக்க நைஜீரிய ஆளுநர்கள் ஜனாதிபதியிடம் விண்ணப்பம்

T24 News Desk

பொலிவியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 619 அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more