சமூக ஊடகமான முகநூல் மூலம் பெண் ஒருவர் விற்பனை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
லெபனானில் இருந்து முகநூல் மூலம்”நைஜீரிய பெண் விற்பனைக்கு”-என்று கடந்த மார்ச் மாதம் விளம்பரம் ஒன்று பதிவிடப்பட்டது.
இந்த விளம்பரத்தில் நைஜீரியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த விளம்பரத்தில் அந்தப் பெண் ணின் ஒளிப்படமும் பதிவிடப்பட்டிருந் து.
இதைப் பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கண்டனங்களைத் தெரி வித்தனர். சில நாள்களுக்குப் பிறகு இந்தப்பதிவை இட்டவர் கைது செய்யப்பட்டார்.
ஆயிரம் டொலருக்கு விற்கப்பட்ட அந்தப் பெண் லெபனான் பொலிஸாரால் மீட்கப்பட்டு பெய்ரூட்டில் இருக்கும் நைஜீரியத் தூதரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் பொலிஸாரால் மீட்கப்பட்ட குறித்த பெண் தனக்கு லெபனா ல் ஒரு நல்ல வேலை கிடைத்துவிவதாகக்கூறி நைஜீரியாவுக்கு திரும்பு வதற்கு மறுக்கிறார்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு லெபனானில் வீட்டு வேலைக்காகச் செல்கின்ற நைஜீரியர்களுக்கு நுழைவிசைவு வழங்குவதை லெபனான் தூதரகம் நிறுத்தியுள்ளது.
நைஜீரியா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் ஆண்டு தோறும் கடத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.