உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றுக்கள் அதிகரித்து வருவதால், முகமூடிகளை கட்டாயமாக பயன்படுத்த ஒப்புதல் அளிக்குமாறு நைஜீரிய மாநில ஆளுநர்கள் ஜனாதிபதி முஹம்மடு புஹாரியிடம் (Muhammadu Buhari )கேட்டுள்ளனர்.
வைரஸ் தொற்றினைச் சமாளிக்க கூட்டாட்சி மற்றும் மாநில மட்டங்களில் ஒரே மாதிரியான ஒருங்கிணைந்த கொள்கையை உறுதிப்படுத்த புஹாரியின் ஒப்புதல் தேவை என்று 36 ஆளுநர்கள் எதிர்பார்ப்பதாக நைஜீரியா ஆளுநர்கள் மன்றத்தின் (Nigeria Governors’ Forum) கடிதம் தெரிவித்துள்ளது.
நைஜீரியாவில் கொரோனா வைரஸின் 114 புதிய தொற்றுக்கள் வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளன, இதுவரை மொத்தம் 1,095 நோய்த்தொற்று,32 பேர் இறப்பு. மொத்தம் 28 மாநிலங்களில் இதுவரை தொற்றுக்கள் பதிவாகியுள்ள, அவற்றுள்பாதிக்கும் மேற்பட்டவை வணிக மையமான லாகோஸில் ஏற்பட்டுள்ளன.
200 மில்லியன் மக்களுடன், நைஜீரியா ஆப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. அதில் சுமார் 20 மில்லியன் பேர் லாகோஸில் வசிக்கின்றனர்.