கொரோனா வைரசுக்கெதிரான எந்தவித எதிர்ப்பு நடவடிக்கைகளும் எடுக்காத பட்சத்தில் ஆப்பிரிக்காவில் மிகமோசமான நிலை உருவாகும் என லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் தரவுகளை மேற்க்கோள்காட்டி புதிய அறிக்கை வெளிவந்துள்ளது.
எந்தவித எதிர்ப்பு நடவடிக்கைகளும் எடுக்காத மிக மோசமான சூழ்நிலையில், ஆப்பிரிக்காவில் மாத்திரம் 3.3 மில்லியன் இறப்புகளும் 1.2 பில்லியன் தொற்றுக்கு உள்ளவர்களும் காணப்படலாம் என்று யுனைடெட் ஆப்பிரிக்காவின் பொருளாதார ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.
சிறந்த சூழ்நிலையில் “தீவிரமான தனிமைப்படுத்தல்” நடவடிக்கை எடுத்தால் கூட ஆபிரிக்கக்கண்டத்தில் குறைந்தது 122 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தொற்றுக்கு உள்ளாகக்கூடும் என அவ் அறிக்கை கூறுகிறது.
எந்தவொரு சூழ்நிலையும் ஆபிரிக்காவின் பெரிதும் பலமில்லாத மற்றும் நிதியுதவி இல்லாத சுகாதார அமைப்புக்கள் மூழ்கடிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
17/04/2020 நிலவரப்படி 18,000 க்கும் மேற்பட்ட வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளிகள் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் தொற்றுநோய்களில் ஆப்பிரிக்கா ஐரோப்பாவிற்கு சில வாரங்கள் பின்னால் இருப்பதாகவும், அதிகரிப்பு விகிதம் ஆபத்தான முறையில் ஒத்திருப்பதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.