T24 Tamil Media
ஆபிரிக்கா

ஆபிரிக்காவில் மீண்டும் தலை தூக்கும் எபோலா வைரஸ்.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் தொற்று பரவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த நாட்டின் வங்காட்டா பிராந்தியத்தில் 6 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் இறந்து விட்டனர். 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுபற்றி உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் மட்டுமே மக்கள் எதிர்கொள்ளும் சுகாதார அச்சுறுத்தல் அல்ல என்பதற்கான நினைவூட்டலாக இது அமைந்துள்ளது.

எங்கள் கவனத்தின் பெரும்பகுதி கொரோனா வைரஸ் தொற்றின்மீது இருந்தாலும், பிற சுகாதார நெருக்கடிகளையும் உற்று நோக்கி கண்காணித்து பதிலளித்து வருகிறோம்’’ என குறிப்பிட்டார்.

கொங்கோவில் 2018-ம் ஆண்டு முதல் எபோலோ வைரஸ் தொற்று தாக்கி வருகிறது. 2,243 பேர் அதற்கு பலியாகி உள்ளனர்.

இந்த வைரஸ் இன்னும் அங்கு முடிவுக்கு வந்ததாக அந்த அரசு அறிவிக்கவில்லை. எபோலா வைரஸ், காங்கோவில் 11-வது முறையாக தாக்கத்தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது

Related posts

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேலில் இருந்து பஹ்ரைன் நாட்டிற்கு முதல் நேரடி விமானம்.

T24 News Desk 4

ருவாண்டாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் மரணம்.

T24 News Desk 4

மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவோரி கோஸ்ட்டில் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி ..

T24 News Desk 4

மூளும் பகையால் மூன்றாம் உலகப்போருக்கு சாத்தியம் !! ரோபோக்களுடன் தயாராகும் நாடு

T24 News Desk 4

முகநூல் மூலம் பெண் ஒருவர் விற்பனை .

T24 News Desk 4

முகக்கவசமின்றி நடமாடிய பல்கேரியாவின் பிரதமருக்கு அபராதம்.

T24 News Desk 4

முகக்கவசத்தினை கட்டாயமாக்க நைஜீரிய ஆளுநர்கள் ஜனாதிபதியிடம் விண்ணப்பம்

T24 News Desk

பொலிவியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 619 அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more