T24 Tamil Media
இலங்கை செய்தி

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த தாய் மரணம்

தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பில் உறுப்பினராக இணைந்து தனது மகனை தேடி வந்த தாயார் ஒருவர் நேற்று (18) சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

கைவேலி புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயாரான சுந்தரலிங்கம் கனகமணி என்ற தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான சுந்தரலிங்கம் சுரேஷ்குமார் கடந்த 2009 ஆண்டு சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டார்.

தற்போதுவரை தனது அன்பு மகனை தாயாரால் காணாமுடியாத நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இலங்கை அரச படைகளாலும், துணை இராணுவக் குழுக்களாலும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டி கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை வட கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவௌவாறு நீதியை வேண்டிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பல நூற்றுக்கணக்கான தாய்மார்கள் தந்தையர்கள் சாவடைந்த நிலையில் குறித்த தாயாரும் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இவரின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கும்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அமைப்புக்கும் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more