விஜய் டிவியில் கொடிகட்டி பறக்கும் சீரியல் என்று பார்த்தால் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான். இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் அனைவரும் சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டனர்.
சமீபத்தில் இந்த சீரியலில் நடித்த சித்ராவின் மரணத்திற்கு பிறகு பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. இவருடைய கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார் போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்தன.
அதன் பிறகு இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்திற்கு அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்னும் சீரியலில் நடித்துவரும் அறிவுமணி என்பவர் முல்லையின் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
தற்போது இந்த சீரியல் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இதனை ஹிந்தியில் ரீமேக் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.