தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருபவர், முன்னணி நடிகை த்ரிஷா.இப்போது தமிழ், மலையாளத்தில் நடித்து வரும் அவர் தனது திருமணம் பற்றி மீண்டும் கூறியுள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் தயாரிப்பாளர் வருண் மணியனை காதலித்தார் நடிகை த்ரிஷா. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், திடீரென திருமணம் நின்றுபோனது.
கருத்துவேறுபாடு காரணமாக நின்றுபோனதாக அப்போது கூறப்பட்டது. இது பரபரப்பாகப் பேசப்பட்டது.