சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். அவருக்கு கௌதம் கிச்சலு என்பவருடன் திருமணம் நடைபெற்ற பிறகும் அவர் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில் அவரது கைவசம் தமிழில் இந்தியன் 2 படமும், தெலுங்கில் ஆச்சார்யா என்ற படமும் உள்ளது.
சமீபத்தில் ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட காஜல் அகர்வால், அப்படத்தில் முழுவீச்சில் நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் பழனி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.
நடிகை கயல் அகர்வால் மாவீரன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். மேலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவானது.
இதேவேளை, நடிகை காஜல் அகர்வால் சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, ஜில்லா, மாரி, விவேகம் மெர்சல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.