தமிழில் பிசாசு 2, தலைவி, விசித்திரன், புளூவேல் தெலுங்கில் சுந்தரி மற்றும் பெயரிடப்படாத பாலகிருஷ்ணா படத்தில் நடித்து வருகின்றார் நடிகை பிபூர்ணா.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் திருமணம் என்ற பெயரில் ஒரு சிலர் ஏமாற்றினார். என்றாலும் அதிலிருந்து தப்பி வந்தார் பூர்ணா.
இதேவேளை,திருமணம் குறித்து பூர்ணா கூறும்போது “இப்போது நான் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறேன். பெற்றோரும் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள்.
தற்போது, படத்தை முடித்து கொடுத்து விட்டு அடுத்த ஆண்டுக்குள் திருமணம் செய்ய இருக்கிறேன்.
இறுதியாக” திருமணத்திற்கு பிறகும் நடிக்க ஒப்புக் கொள்கிறவர் தான் மாப்பிள்ளை” என்று குண்டை தூக்கு போட்டார் பூர்ணா