அருண் விஜய் ஜோடியாக பாலக் லால்வானி நடித்து உருவாகி வரும் திரைப்படம் சினம். அருண் விஜய் போலீசாக நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியா நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிட்டது.
போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில் படத்தின் டப்பிங் பணிகளையும் முடித்து விட்டார். இறுதி கட்ட பணிகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சினம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்திருந்தார் அருண் விஜய்.
பதிவின் கீழ் கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர், படம் ஓடிடி-ல் வெளியாகுமா? அல்லது திரையரங்கில் வெளியாகுமா ?என வினவினார்.
விரைவில் சென்சார் சான்றிதழ் பெற்று ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் படம் தியேட்டரில் வெளியாகும் என கூறியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.